His Motivation...
About Him.
எமது சங்கத்தின் இனிய நண்பர்களுக்கு எனது வாழ்க்கையின் சில வரலாறை உங்களுக்கு சொல்ல விளைகின்றேன். நான் ஓர் விவசாயின் மகன். குடும்பத்தில் மூத்தவன். நான் சின்னத்துரை செல்லம்மா ஆகியோருக்கு 1943-10-8 யாழ் கோப்பாய் மாவட்டத்தில் பிறந்தேன். ஐயா அம்மாவுக்கு உதவியாக சிறிதளவு மரக்கறி வகைகள் செய்து வாழ்ந்தோம். நான் எனது தம்பிகளுடன் திலா மிதித்துதான் கமம் செய்தோம். நான் செங்குத்தா இந்துக்கல்லூரியில் ஏ-எல் வரை படித்தேன். பின் விவசாயப்பணணையில் படித்தேன். பின்பு வவனியா விவசாயப் பண்ணையில் 2 வருடங்கள் வேலை கடமையாற்றினேன். பின்பு அம்பாறையில் மிருகவைத்தியர் காரியாலயத்தில் கடமை செய்தேன். 1971 டில் உரும்பிராயில் சின்னையா இராசம்மாவின் மகள் சிவமலரை திருமணம் செய்தேன். நல்ல செம்மண் நீர் வசதி இருந்ததால் முந்திரிகை வாழை மிளகாய் வெண்காயம் கறணை இராசவள்ளி போன்ற பயிர்கள் செய்து சிறப்புடன் வாழ்ந்தோம். பின்பு முல்லைத்தீவு, பருத்துறை யாழ்ப்பாணம் கண்டி திருமலை மட்டக்களப்பு போன்ற மிருகவைத்தியசாலைகளில் வேலை செய்து 15 வருடத்தின் பின்பு இளைப்பாறி 1990 கனடா வந்து 20 வருடங்கள் வேலை செய்து 2009 இளைப்பாறி பிள்ளைகள் பவானி உமா கவிதா மகன் பிரதீப் ஆகியோருடன் பேரப்பிள்ளைகள் உடன் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடன் வாழ்கின்றோம்.
தங்கள் நண்பன் – சின்னத்துரை கனகரத்தினம்